Tuesday, November 8, 2016

நவ.24ம் தேதி வரை ரூ.4000 மட்டுமே மாற்ற முடியும்

நவ.24ம் தேதி வரை ரூ.4000 மட்டுமே மாற்ற முடியும்
ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டாலும் அதிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஒருவர் தனது அடையாள அட்டையை பயன்படுத்தி ரூ.4,000 வரையிலான நோட்டுகளை  மட்டுமே மாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

ஏழைகள் பீதியடைய வேண்டாம்

ஹவாலா மூலம் வெளிநாட்டில் இருந்து அதிகமான அளவு  இந்தியாவுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்படுகிறது. இதனால் அரசுக்கு  வருமான இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கவும் அரசுக்கு முறையாக கிடைக்க வேண்டிய பணத்தை பெறவும் மததிய அரசு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அதிகப்படியான பணப்புழக்கம் ஹவாலா பண நடமாட்டத்துக்கு வழிவகுப்பதாக மோடி  தெரிவித்துள்ளார்.

பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர  நடவடிக்கை மேற்கொண்டுள்ள மத்திய அரசு  ஏழைகளை பாதுகாக்கும்  வகையில் சில நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் ஏழைகள் பீதியடைய வேண்டாம் என மோடி தெரிவித்துள்ளார். ‘‘உங்கள் பணம்  உங்களுடையதே. இந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது’’ என மோடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment